சர்ச்சை கருத்து: நடிகைக்கு பிடிவாரண்ட்

சர்ச்சை கருத்து: நடிகைக்கு பிடிவாரண்ட்

சர்ச்சை கருத்து: நடிகைக்கு பிடிவாரண்ட்
Published on

வால்மீகி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததாக நடிகை ராக்கி சாவந்துக்கு லூதியானா கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்தி நடிகை ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது ராமாயணத்தை எழுதிய வால்மீகி பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்தைத் தெரிவித்தாராம். சமுதாய உணர்வுகளை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது பஞ்சாப் மாநிலம் லூதியானா கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி கோர்ட் பலமுறை உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை. கடந்த மாதம் 9-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் அவர் ஆஜராகாததால், அவருக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. வாரண்டுடன் லூதியானா போலீசார் மும்பைக்கு விரைந்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com