சங்கமித்ராவில் மீண்டும் கட்டப்பாவாக களமிறங்கும் சத்யராஜ்!
ரூ.400 கோடி பட்ஜெட்டில் மிகப்பிரம்மாண்டமாக சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருக்கிறது சங்கமித்ரா திரைப்படம்.
இந்தப்படத்தில் நாயகியாக ஒபந்தம் செய்யப்பட்ட ஸ்ருதிஹாசன் விலகியதை அடுத்து மற்ற நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வரும் வேளையில், பாகுபலி முதல், இரண்டாம் பாகத்தில் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் சங்கமித்ரா படத்தில் கட்டப்பா கேரக்டரிலேயே நடிக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நடிக்கின்றனர். படப்பணிகள் ஆரம்பகட்டத்தில் இருப்பதால், விரைவில் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். சத்தியராஜ், விஜய்யின் மெர்சல் படத்திலும், வெங்கட்பிரபு இயக்கும் பார்ட்டி படத்திலும் தற்போது நடித்து வருகிறார். சங்கமித்ரா படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் தயாரிக்க இருக்கிறது.