\
சதுரங்கவேட்டை-2 டீசர் வெளியீடு!

சதுரங்கவேட்டை-2 டீசர் வெளியீடு!

சதுரங்கவேட்டை-2 டீசர் வெளியீடு!
Published on

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சதுரங்கவேட்டை-2 படத்தின் டீசர் இன்று வெளியானது.

ஏமாறுபவர்களுக்கு தண்டனை அவர்கள் இழக்கும் பொருள். ஏமாற்றுபவர்களுக்கு தண்டனை தனிமையும், நிம்மதியற்ற வாழ்க்கையும் என்கிற சித்தாந்தத்தோடு 2014ம் ஆண்டு வெளியான படம் சதுரங்கவேட்டை. ஹெச் வினோத் குமார் இயக்கத்தில் நட்டி நடராஜன் , இஷாரா நாயர் நடித்த சதுரங்கவேட்டை மாபெரும் வெற்றியடைந்தது. இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கி இருக்கிறார். நடிகர் மனோபாலா தயாரித்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய ஹெச்.வினோத் கதை அமைத்துள்ளார். அரவிந்த் சாமி திரிஷா நடித்துள்ள இந்தப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.   

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com