’நாய் சேகர்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் சதீஷ்: கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்த்து

’நாய் சேகர்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் சதீஷ்: கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்த்து
’நாய் சேகர்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் சதீஷ்: கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்த்து

சதிஷ் நடிக்கும் ‘நாய் சேகர்’ படத்திற்கு கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமே அறியப்படும் நடிகர் சதீஷ் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் சதீஷ் ’நாய் சேகர்’ படத்தில் நடித்து வருகிறார். ஹீரோயினாக ‘குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா லக்‌ஷ்மி நடிக்கிறார். சமீபத்தின் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியும் தருவாயில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்த, நிலையில் சதீஷ் ஹீரோவாக நடிப்பதால் கிரிக்கெட் வீரர் நடராஜன் “வாழ்த்துகள் சதீஷ் அண்ணா” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நடராஜன், சிவகார்த்திகேயன், சதீஷ் மூவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ காலிலும் அடிக்கடி பேசிக்கொள்வார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com