\
கொடி வீரன் அண்ணன் - தங்கை கதையா?

கொடி வீரன் அண்ணன் - தங்கை கதையா?

கொடி வீரன் அண்ணன் - தங்கை கதையா?
Published on: 

சசிகுமார் தயாரித்து நடிக்கும் படம், ‘கொடி வீரன்’. முத்தையா இயக்கும் இந்தப் படத்தின் கதை சூர்யாவுக்காக உருவாக்கப்பட்டது. சில காரணங்களால் அவர் நடிக்காமல் போனதை அடுத்து சசிகுமார் நடிக்கிறார்.

இதில், சசிகுமார் தங்கையாக சனுஷா நடிக்கிறார். அவர் கணவராக விதார்த் நடிக்கிறார். பூர்ணா, நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். படத்துக்காக அவர் நிஜமாகவே மொட்டை போட்டுள்ளார். மேலும் மகிமா நம்பியார், பாலசரவணன் உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.

இதுபற்றி சசிகுமார் கூறும்போது, ‘இந்தப் படத்தின் ஷூட்டிங் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடந்துவந்தது. இப்போது படப்பிடிப்பு முடிந்துவிட்டது. நீண்ட கூந்தல்தான் பெண்களின் ஆசை. ஆனால், இந்தப் படத்துக்காக அதை துறந்திருக்கிறார் பூர்ணா. கதைக்காக அவர் முடி துறந்தது வியக்க வைக்கிறது’ என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com