வெற்றிமாறன் கதையில் நடிக்கும் சசிக்குமார் ! வெளியான புது அப்டேட்

வெற்றிமாறன் கதையில் நடிக்கும் சசிக்குமார் ! வெளியான புது அப்டேட்

வெற்றிமாறன் கதையில் நடிக்கும் சசிக்குமார் ! வெளியான புது அப்டேட்
Published on

தமிழின் வெற்றி இயக்குநர் வெற்றிமாறன் கதை திரைக்கதையில் சசிக்குமார் நடிக்கவிருக்கிறார். வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகமான பொல்லாதவன் படத்தின் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தான் இப்படத்தை தயாரிக்கவிருகிறார் என்று என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம்தான் வெற்றிமாறன் இயக்குநராகவும், ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்கள். பைக்கை சுற்றி பின்னப்பட்ட வித்தியாசமான கதை என்பதால் வெற்றி பெற்றதோடு, பாடல்களும் இப்போதுவரை பலரின் காதல் டியூன்களாக உள்ளன.

 ஆடுகளம், விசாரணை, வடச்சென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய வெற்றிமாறன், அடுத்ததாக சூரியை வைத்து ஒரு படமும், நடிகர்  சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தையும் இயக்கவிருக்கிறார். இந்நிலையில், அவரின் அடுத்தப் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது.

 ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 'ஆடுகளம்' படத்தை தயாரித்தார். இப்படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது. மேலும் ‘நய்யாண்டி',' ஜிகர்தண்டா' போன்ற பல படங்களைத் தயாரித்தார்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணையும் இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை, திரைக்கதை  எழுதுகிறார். கதாநாயகனாக சசிகுமார் நடிக்கிறார். படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் வெளிவரும்” என்று அறிவித்துள்ளார்கள்.

இதற்கு முன்பும் சித்தார்த் நடிப்பில் வெளியான உதயம் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். அந்த படத்தை அவரது உதவி இயக்குநர் மணிமாறன் இயக்கி இருந்தார். நான் ராஜாவாக போகிறேன் படத்திற்கும் வசனம் எழுதியிருந்தார் வெற்றிமாறன். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com