சமுத்திரக்கனி இயக்கத்தில் மீண்டும் சசிகுமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது ’கொம்பன்’முத்தையா இயக்கத்தில் ‘கொடி வீரன்’ படத்தில் நடித்து வருகிறார் சசிகுமார். இந்தப்படத்தை முடித்த பிறகு சசிகுமார் மீண்டும் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப்படத்தை தமிழில் சசிகுமாரை வைத்தும், தெலுங்கில் நானியை வைத்தும் இயக்க இருக்கிறார் சமுத்திரக்கனி. ஒரு படத்தை முடித்துவிட்டு, அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவது சசிகுமாரின் வழக்கம். ‘கொடி வீரன்’ படத்தை முடித்துவிட்டு, சமுத்திரக்கனி இயக்கும் படம் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ’நாடோடிகள்’ மற்றும் ‘போராளி’ ஆகிய படங்களை சசிகுமாரை வைத்து இயக்கி இருந்தார் சமுத்திரக்கனி.

