இது அஜித்தா? இல்ல மம்முட்டியா? - சசிகுமாரின் ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்!
நடிகர் சசிகுமாரின் ஸ்டைலிஷ் போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ’சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் இயக்குநராக மட்டுமல்ல நடிகராகவும் அறிமுகமனார் சசிகுமார்.
அதனைத்தொடர்ந்து அவர், நடித்த நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத் தேவா, கொடிவீரன், அசுரவதம், கென்னடி கிளப், நாடோடிகள் 2 என பெரும்பான்மையான படங்கள் கிராமத்துக் கதைகள்தான்.
அதனால், அந்த கதைக்கேற்ப கிராமத்துக் கெட்டப்புகளிலேயே நடித்து வந்தார். ஸ்டைலிஷ் காஸ்டியூம்களில் திரையில் அவரைப் பார்த்தது என்பது குறைவுதான்.
இந்நிலையில், தற்போது ப்ரவுன், நேவி ப்ளூ கலர் உடையில் செம்ம ஸ்டைலிஷாக போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார். சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி தாடியுடன் பழுப்பு மற்றும் பொன் நிற பேக்ரவுண்டில் அந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் ‘சசிகுமாரா இது?’ என்று ஆச்சர்யமூட்டுவதோடு ‘அஜித்தா? இல்ல மம்முட்டியா?’ என்று உற்றுநோக்க வைக்கின்றன.
இந்த புகைப்படத்தை சசிகுமாரின் ரசிகர்கள் ’வெறித்தனமா இருக்கீங்க… வேற லெவல்’ என்று கருத்திட்டு வருகிறார்கள்.