\
சசிகுமாரின் 'எம்.ஜி.ஆர். மகன்' ரிலீஸ் தள்ளிவைப்பு!

சசிகுமாரின் 'எம்.ஜி.ஆர். மகன்' ரிலீஸ் தள்ளிவைப்பு!

சசிகுமாரின் 'எம்.ஜி.ஆர். மகன்' ரிலீஸ் தள்ளிவைப்பு!
Published on: 

தமிழக அரசு விதித்துள்ள கொரோனா புதிய கட்டுப்பாடுகள் காரணமாக சசிகுமார் நடித்த 'எம்.ஜி.ஆர். மகன்' திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் - சத்யராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எம்.ஜி.ஆர். மகன்'. இந்தப் படத்திற்கான அனைத்து வேலைகளும் கடந்த வருடம் முடிவடைந்தன. ஆனால், அப்போதைய ஊரடங்கு காரணமாக படம் வெளியாகவில்லை. அதேபோல், இந்த ஆண்டும் சரியான வெளியீட்டு தேதிக்கு காத்திருந்தனர்.

அதன்படி, ஏப்ரல் 23-ஆம் தேதி படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதற்கான வியாபாரங்கள் முடிவடைந்து, திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யும் பணி நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலையின் எதிரொலியாக, தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதால் 'எம்.ஜி.ஆர். மகன்' வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com