\
தனுஷூக்கு அண்ணனாக நடித்தது ஏன்?: சசிகுமார்

தனுஷூக்கு அண்ணனாக நடித்தது ஏன்?: சசிகுமார்

தனுஷூக்கு அண்ணனாக நடித்தது ஏன்?: சசிகுமார்
Published on

’அசுரவதம்’ படத்தின் ஹிட்டுக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கும் ’நாடோடிகள் 2’ படத்தில் நடித்துள்ளார் சசிகுமார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவருகிறது. 

(எனை நோக்கி பாயும் தோட்டா)

இதற்கிடையில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கும், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இதில் தனுஷுக்கு அண்ணனாக சசிகுமார் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி சசிகுமார் ’புதிய தலைமுறை’யிடம் பேசும்போது, ’தனுஷ், கவுதம் மேனன் படம் என்பதால் நடிக்க சம்மதித்தேன். கெஸ்ட் ரோல்தான் என்றாலும் படத்தில் முக்கியத்துவம் இருக்கிறது. தனுஷூடன் நடித்தது இனிமையான அனுபவமாக இருந்தது.

அதோடு கவுதம் வாசுதேவ் மேனன் ஸ்டைலிஷ் இயக்குனர். அவர் இயக்கத்தில் நடித்ததும் எனக்கு வித்தியாசமாக இருந்தது. இன்னும் ஷூட் டிங் பாக்கி இருக்கிறது. இந்தப் படத்தை அடுத்து மேலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த படத்தை முடித்துவிட்டு நான் இயக்கும் படத்தில் நடிக்கிறேன்’ என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com