\
சசிகுமாருக்காக மொட்டை போட்ட ஹீரோயின்!

சசிகுமாருக்காக மொட்டை போட்ட ஹீரோயின்!

சசிகுமாருக்காக மொட்டை போட்ட ஹீரோயின்!
Published on

சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் படம், ’கொடி வீரன்’. குட்டிப்புலி, கொம்பன், மருது படங்களை அடுத்து முத்தையா இயக்குகிறார். இதில் மகிமா, சனுஷா, பூர்ணா, பால சரவணன் உட்பட பலர் நடிக்கின்றனர். பசுபதி வில்லனாக நடிக்கிறார். ரகுநந்தன் இசை அமைக்கிறார். எஸ்.ஆர்.கதில் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடந்துவருகிறது. இந்தப் படத்துக்காக நடிகை பூர்ணா மொட்டை அடித்துள்ளார். 

‘படத்தில் பூர்ணா கேரக்டர் முக்கியமானது. அது வில்லி கேரக்டரா என்பதை சொல்ல முடியாது. படத்தில் எல்லாருமே நல்லவர்கள்தான். கதைப்படி மொட்டையடித்த பின் வளர்ந்த சிறு முடிகளுடன் பூர்ணா வரவேண்டும். இப்படியொரு கேரக்டரில் நடிக்கக் கேட்டதும் பூர்ணா சம்மதித்தார். ஒரு கேரக்டருக்காக ஹீரோயின் ஒருவர் முடி துறப்பது ஆச்சரியமான விஷயம்தான். பூர்ணாவின் டெடிகேஷன் பார்த்து வியந்தோம். இப்போது அந்த தலையுடன் அவர் நடித்துவருகிறார். அவருக்கு இந்தப் படம் திருப்புமுனையாக இருக்கும்’ என்றது படக்குழு. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com