ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாள மயம்’ ஷூட்டிங் ஆரம்பம்

ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாள மயம்’ ஷூட்டிங் ஆரம்பம்

ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாள மயம்’ ஷூட்டிங் ஆரம்பம்
Published on

ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாள மயம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க சினிமாட்டோகிராஃபர் ராஜீவ் மேனன். இவரது கேமரா பதிவில் உருவான ‘குரு’, ‘பம்பாய்’ போன்ற படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன. மேலும் ஒளிப்பதிவாளராக மட்டும் நின்றுவிடாமல் ‘மின்சார கனவு’, ‘கண்டு கொண்டேன்.. கண்டு கொண்டேன்’ மூலம் இயக்குநராகவும் அடையாளமானார் ராஜீவ் மேனன். பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் இயக்க உள்ள திரைப்படம் ‘சர்வம் தாள மயம்’. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். அதன் முதல்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், “உங்களுடைய வாழ்த்தை எதிர்பார்க்கிறேன். மேலும் மொசார்ட் ஆஃப் இந்தியா மற்றும் என் குரு ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைக்கிறார். இது ராஜீவ் மேனன் திரைப்படம். மேலும் மிக அழகான பாடல்கள் நிறைந்த திரைப்படம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் சம்பந்தமாக தனது ட்விட்டரில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com