இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன ‘சர்கார்’ இசை விழா

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன ‘சர்கார்’ இசை விழா
இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன ‘சர்கார்’ இசை விழா

‘சர்கார்’ பாடல் வெளியீட்டை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களை கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்கார்’. இந்தத் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, வரலக்ஷ்மி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகின. முதல் பாடலான ‘சிமிட்டங்காரன்’ ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இரண்டாவது பாடலான ‘ஒரு விரல் புரட்சி’ அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. 

இந்நிலையில் சர்காரின் பாடல் வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்று வருகிறது. ‘சர்கார்’ பாடல் வெளியீட்டை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். பாடல் வெளியீட்டின் புகைப்படங்களை பகிர்ந்தும், வீடியோவை பகிர்ந்தும் வருகின்றனர். ரசிகர்களின் தொடர் பதிவுகளால் #SarkarAudioLaunch என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில்  உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com