சினிமா தயாரிப்பில் இறங்குகிறது சரவணா ஸ்டோர்ஸ்!

சினிமா தயாரிப்பில் இறங்குகிறது சரவணா ஸ்டோர்ஸ்!

சினிமா தயாரிப்பில் இறங்குகிறது சரவணா ஸ்டோர்ஸ்!
Published on

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது சரவணா ஸ்டோர் நிறுவனம். இதன் உரிமையாளர் எஸ்.எஸ்.சரவணன். கடந்த வருடம் இந்த ஸ்டோரின் அண்ணாநகர் கிளை திறப்பு விழாவில் ஸ்ரேயா, ஹன்சிகா, வைரமுத்து, ஜெயம் ரவி, தமன்னா உட்பட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் தோன்றி நடித்ததை அடுத்து பிரபலமானார் சரவணன்.
நயன்தாரா ஜோடியாக அவர் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. ஆனால், இதை மறுத்த சரவணன், ‘விளம்பரப் படத்தில் கூட நான் தான் நடிக்க வேண்டும் என்று திட்டம் எதுவும் இல்லை. திடீரென்று நினைத்தேன், நடித்தேன். தொடர்ந்து விளம்பர படத்தில் நடிப்பது குறித்தும் முடிவு செய்யவில்லை’ என்று கூறியிருந்தார். 
இந்நிலையில் அவர் படம் தயாரிக்க இருப்பதாக கோடம்பாக்கத்தில் தகவல்கள் பரவியுள்ளது. இயக்குனர் கே.வி.ஆனந்த் அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அதன் உரிமையாளர் சரவணன், கெஸ்ட் ரோலில்
நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com