\
இந்தியில் அறிமுகமான சரண்யா பொன்வண்ணன்

இந்தியில் அறிமுகமான சரண்யா பொன்வண்ணன்

இந்தியில் அறிமுகமான சரண்யா பொன்வண்ணன்
Published on

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன் நடித்து அறிமுகமாகியிருக்கிறார்.

மணிரத்னம் இயக்கிய 'நாயகன்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். அதைத் தொடர்ந்து பல குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர், தற்போது பல ஹீரோக்களுக்கு அம்மாவாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளிலும் நடித்தவர் தற்போது 'Chup' படம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார்.

பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான பால்கி இயக்கத்தில் துல்கர் சல்மான், ஸ்ரேயா தன்வந்திரி, சன்னி தியோல் ஆகியோர் நடிப்பில் உருவான படம் 'Chup'. நேற்று (செப் 23) வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன் நடித்து பாலிவுட்டில் அறிமுகமாகியிருக்கிறார். படத்தில் இவரது நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: டாக்குமெண்டரியாக வெளியாகும் ”நயன்தாரா-விக்னேஷ் சிவன்” திருமணம் - நெட்ஃப்ளிக்ஸ் அறிவிப்பு

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com