\
மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கிய தனுஷ் - வெளியானது புதுப்பட அறிவிப்பு

மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கிய தனுஷ் - வெளியானது புதுப்பட அறிவிப்பு

மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கிய தனுஷ் - வெளியானது புதுப்பட அறிவிப்பு
Published on: 

தனுஷ் நடிக்கும் புதிய பாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆத்ரங்கி ரே (Atrangi Re ) என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சாரா அலிகான் நடிக்கவுள்ளார்.

பாலிவுட்டில் தனுஷ் நடித்த முதல் படம் "ரான்ஜனா", இந்தப் படத்தை இயக்கியவர் ஆனந்த் எல்.ராய். இந்தப் படத்துக்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். ரான்ஜனா இந்தியில் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இது பாலிவுட்டில் அவருக்கென்று ஒரு அடையாளத்தை பெற்றுத்தந்தது. இந்த வெற்றிக்கு பிறகு, பால்கி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் இணைந்து "ஷமிதாப்" படத்தில் நடித்தார். இளையராஜா இசையமைத்த இந்தப் படம், எதிர்பார்த்த வெற்றியை தனுஷ்க்கு பாலிவுட்டில் பெற்றுத் தரவில்லை.

இதனையடுத்து தனது மூன்றாவது இந்திப் படத்திற்காக, தனக்கு இந்தியில் முதல் வெற்றியை பெற்றுத் தந்த இயக்குநர் ஆனந்த எல்.ராய் கூட்டணியுடன் சேர்ந்திருக்கிறார் தனுஷ். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகரான சைஃப் அலிகானின் மகளான சாரா அலிகான் தனுஷ்க்கு ஜோடியாகிறார். மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இந்தப் படத்தில் வரும் கதாப்பாத்திரத்தில் நடிப்பது மிகவும் சவாலான விஷயம் என்று அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com