நீலவானம்… பறக்கும் காலம்… கனவுதேசம்  சாராவின் இன்ஸ்டாகிராம் புகைப்படம்

நீலவானம்… பறக்கும் காலம்… கனவுதேசம் சாராவின் இன்ஸ்டாகிராம் புகைப்படம்

நீலவானம்… பறக்கும் காலம்… கனவுதேசம் சாராவின் இன்ஸ்டாகிராம் புகைப்படம்
Published on

ஒருவகையில் பிரபலங்களுக்கு ஊரடங்கு நாட்கள் கொடையாக கிடைத்திருக்கிறது. நிற்க நேரமின்றி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடிகிறது. பாலிவுட் நடிகை சாரா அலிகான் இப்படி வீட்டில் நேரம் செலவிடுவதை ரசனையுடன் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை ரசிர்களுக்காக அவ்வப்போது வெளியிட்டுவருகிறார். வீட்டில் தாய் அம்ரிதா சிங் மற்றும் சகோதரர் இப்ராகிம் அலிகானுடன் நேரத்தைச் செலவிடும் அவர், கனவுதேசத்தில் இருப்பதாகக் கூறி ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் இரவு நேரத்தில் மின்னும் வானத்தைப் பார்த்தபடி தெருவில் நின்றுகொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் சாரா. பல வண்ணங்கள் கொண்ட உடையுடன் காட்சியளிக்கும் சாரா, ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து வானத்தை ரசித்துக் கொண்டிருக்கிறார். “நீல வானம்… நேரம் பறக்கிறது” என்று குறிப்பிட்டு கனவுதேசம் என்று எழுதியுள்ளார்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நாட்களில் சைக்கிளிங் செய்யும் படங்களைக்கூட சாரா அலிகான் வெளியிட்டிருந்தார். தற்போது அவர் வருண் தவானுடன் இணைந்து கூலி நம்பர் 01 படத்தில் நடித்துவருகிறார். அக்சய்குமார் மற்றும் தனுசுடன் சேர்ந்து அட்ரங்கி ரே என்ற புதிய படத்தில் நடிப்பதற்கும் ஓகே சொல்லியுள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com