\
சந்தோஷ் சிவன் இயக்கத்தில் சுவாமி ஐயப்பன்!

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் சுவாமி ஐயப்பன்!

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் சுவாமி ஐயப்பன்!
Published on

சுவாமி ஐயப்பன் பற்றிய படத்தை ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்குகிறார்.

சுவாமி ஐயப்பன் மகிமையை சொல்லும் பல படங்கள் வெளியாகியுள்ளன. ஐயப்பன் கோயிலுக்கு, மாலை போடும் காலத்தில் இதுபோன்ற படங்கள் மறு வெளியீடு செய்யப்படுவது வழக்கம். இப்போது சுவாமி ஐயப்பனின் மகிமையைச் சொல்லும் மெகா பட்ஜெட் படம் ஒன்று உருவாகிறது. இதை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, செய்து இருக்கிறார்.

அனுஷ்கா ஷெட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ஸ்ரீ கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே ’பழசிராஜா’ உட்பட பல படங்களைத் தயாரித்தவர்.

ஐயப்பன் படம் பற்றி கோபாலன் கூறும்போது, ‘’இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் உருவாகிறது. சுவாமி ஐயப்ப னை பற்றிய கதைதான் என்றாலும் வித்தியாசமான கோணத்தில் இந்தக் கதை இருக்கும். அனைத்து மொழியில் இருந்து நடிகர்களை நடிக்க வைக்க பேசி வருகிறோம். இன்னும் யார் யார் நடிக்கிறார்கள் என்று முடிவாகவில்லை. ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. அதிக பட்ஜெட்டில் உருவாகிறது’’ என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com