பறை இசைக்கு செம்ம குத்தாட்டம் போட்ட சந்தோஷ் நாரயணன்! - வைரல் வீடியோ
‘விக்ரம் 60’ படத்திற்கான இசையமைக்கும் பணியில் ஈடுபட்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் பறையிசை கலைஞர்களுடன் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான 'ஆதித்யா வர்மா' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். அதனைத்தொடர்ந்து விக்ரமின் 60 ஆவது படத்தில் துருவ் இணைய இருப்பதாகவும் இந்தப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது.
முன்னதாக, இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக சந்தோஷ் நாரயணன் இசையமைக்க இருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில் விக்ரம் 60 வது படத்திற்கான இசையமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன், பறை இசைக் கலைஞர்களுடன் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப்படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.