தமிழ் சினிமா எல்லாருக்கும் மகுடம் சூட்டுவதில்லை. அப்படி சூடிக் கொள்கிற சிலர், மகுடத்தை தக்கவைத்துக் கொள்வதில் கோட்டை விட்டுவிடுவார்கள். ஆனால். காமெடியனாக இருந்து ஹீரோவாக புரமோசானான பிறகு ஒவ்வொரு படத்தையும் கவனமாக தேர்வு செய்து பாஸ் மார்க் பெற்று வருகிறார் சந்தானம். சர்வர் சுந்தரம், சக்கைப்போடு போடு ராஜா, செல்வராகவன் இயக்கும் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராசுமதுரவனின் உதவியாளர் பச்சையப்பா ராஜா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சந்தானம். ’தனிக்காட்டு ராஜா’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப்படத்தில் வனத்துறை அதிகாரியாக வரும் சந்தானத்துடன் புலி முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருக்கிறதாம். புலிக்கும், ஹீரோவுக்கும் இடையே நடைபெறும் போராட்டம்தான் கதை. இந்த படத்தின் 12 நிமிடங்களுக்கான ’புலி’ கிராபிக்ஸ் காட்சிகளுக்காகவே பட்ஜெட்டில் 4 கோடி ரூபாயை ஒதுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். வித்தியாசமான பாத்திரம் என்பதால் அதற்காக சில பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் சந்தானம். வறட்சி வனப்பகுதிகளையும் வட்டி எடுப்பதால் மழைக்காலத்திற்காக காத்திருக்கிறது படக்குழு. முன்னதாக, சிஜி வேலைகளை ஆரம்பிக்க ஆயத்தமாகி வருகிறார்கள். சந்தானம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகிறதாம் இந்த தனிக்காட்டு ராஜா.