\
சந்தானம் 3 வேடத்தில் நடிக்கும் படத்துக்கு இதுதான் டைட்டில்!

சந்தானம் 3 வேடத்தில் நடிக்கும் படத்துக்கு இதுதான் டைட்டில்!

சந்தானம் 3 வேடத்தில் நடிக்கும் படத்துக்கு இதுதான் டைட்டில்!
Published on

சந்தானம் 3 வேடத்தில் நடிக்கும் படத்துக்கு ’டிக்கிலோனா’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

சந்தானம் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்குகிறார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும் சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் தயாரிக்கிறார்கள். இதில் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு ’டிக்கிலோனா’ என்று டைட்டில் வைத்துள்ளனர். ஷங்கர் இயக்கிய 'ஜென்டில்மேன்' படத்தில் நடிகர் செந்திலும் கவுண்டமணியும் இந்த ’டிக்கிலோனா’வை அறிமுகப்படுத்தினார்கள். 

இந்தப் படத்துக்கு ஏன் இந்த டைட்டில்? என்று இயக்குனரிடம் கேட்டால், ‘படத்திற்கு தலைப்பு என்பது சிலைக்கு தலை செய்வது போல. டைட்டில் அந்தந்த ஜானருக்கு ஏற்ற டைட்டிலாகவும் இருக்க வேண்டும். கேட்சிங்காகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் இந்தப் படத்துக்கு இந்த டைட்டிலை வைத்துள்ளோம்.

படம் பார்க்கும் போது இந்த டைட்டில் ஏன் என்பது ரசிகர்களுக்குப் புரியும்’’ என்கிறார். இப்படத்தின் மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com