\
சந்தானத்தின் புதிய படம் - மோஷன் போஸ்டரை வெளியிட்ட பிரபல தமிழ் இயக்குநர்கள்

சந்தானத்தின் புதிய படம் - மோஷன் போஸ்டரை வெளியிட்ட பிரபல தமிழ் இயக்குநர்கள்

சந்தானத்தின் புதிய படம் - மோஷன் போஸ்டரை வெளியிட்ட பிரபல தமிழ் இயக்குநர்கள்
Published on: 

நடிகர் சந்தானத்தின் புதிய படத்தின் டைட்டில் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை, பிரபல தமிழ் இயக்குநர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சந்தானம், தற்போது கதாநாயகனாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில், ‘ஏஜண்ட் கண்ணாயிரம்‘, ‘மண்ணவன் வந்தானடி‘, ‘சர்வர் சுந்தரம்‘ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சந்தானம் அடுத்ததாக இயக்குநர் ரத்னகுமாருடன் கூட்டணி அமைத்துள்ளார். நடிகர் வைபவ்வின் ‘மேயாத மான்‘, அமலா பால் நடித்த ‘ஆடை‘ போன்ற படங்களை இயக்கியுள்ள ரத்ன குமார், விஜய்யின் ‘மாஸ்டர்’, கமலின் ‘விக்ரம்’ போன்ற படங்களுக்கு கூடுதல் வசனகர்த்தாகவும் பணியாற்றி உள்ளார்.

சந்தானம் - ரத்னகுமார் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை இயக்குநர்கள் கவுதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், நெல்சன், வெங்கட் பிரபு ஆகிய 5 பேரும், இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இயக்குநர்கள் 5 பேரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ரத்னகுமார், சந்தானம் இணைந்துள்ள புதிய படத்திற்கு ‘குலு குலு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com