\
சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ டிரெய்லர் வெளியீடு

சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ டிரெய்லர் வெளியீடு

சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ டிரெய்லர் வெளியீடு
Published on: 

சந்தானம் நடித்துள்ள ’டிக்கிலோனா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்திற்குப் பிறகு நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் 'டிக்கிலோனா'. இந்தப்படத்தில் மூன்று விதமான தோற்றத்தில் சந்தானம் நடித்துள்ளார் என்றும் காலத்தை கடந்து செல்லும் கதைக்களம் என்றும் சொல்லப்படுகிறது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அனைனா, ஷிரின் ஹீரோயின்களாக நடித்துள்ளார்கள். வரும், செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ’டிக்கிலோனா’ திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் தற்போது படத்தின் டிரெய்லரை வெளியிட்டு உள்ளனர்.  கமல்ஹாசனின் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின் ‘வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடல் பின்னணியில் சந்தானம் வகையிலான நகைச்சுவையுடன் வெளியாகியிருக்கிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com