\
இருமொழிகளில் உருவாகும் சந்தானத்தின் அடுத்தப் படம்! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

இருமொழிகளில் உருவாகும் சந்தானத்தின் அடுத்தப் படம்! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

இருமொழிகளில் உருவாகும் சந்தானத்தின் அடுத்தப் படம்! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
Published on

சந்தானம் நடிக்கும் 15-வது திரைப்படம் கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.

நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர் சந்தானம். இவர் நாயகனாக நடிக்கும் 15வது திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. அந்த திரைப்படத்தை பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்குகிறார். நகைச்சுவை பின்னணியில் கன்னடம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் அந்த திரைப்படம் உருவாகிறது. சந்தானத்துடன் நடிகை தன்யா ஹோப் நடிக்கிறார். இவர் தடம், தாராள பிரபு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவராவார்.

பெங்களூருவில் நடைபெற்ற பூஜையில் சந்தானம், தன்யா ஹோப், இயக்குநர் பிரசாந்த் ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அத்துடன் படப்பிடிப்பையும் தொடங்கினர். இந்த திரைப்படத்தை குறுகிய காலத்தில் முடித்து திரைக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com