\
பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட் அடித்த “சஞ்சு”

பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட் அடித்த “சஞ்சு”

பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட் அடித்த “சஞ்சு”
Published on

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ரன்பீர்கபூர் நடித்து வெளிவந்த படம் சஞ்சு. இது சஞ்சய்தத்தின் வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் இப்படம் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்தது. இந்நிலையில் இப்படம் நேற்று உலகம் முழுவதும் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இதனைதொடர்ந்து சஞ்சு திரைப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 34 கோடி வசூல் செய்துள்ளது. எனவே இப்படம்தான் இந்த வருடம் வெளியான படங்களில் முதல்நாள் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்துள்ளது.  இப்படம் முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ 65 கோடி வசூல் செய்திருக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் பல வசூல் சாதனைகளை இப்படம் படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com