ரூ.265 கோடியை தொட்டது சஞ்சு பாக்ஸ் ஆபிஸ்

ரூ.265 கோடியை தொட்டது சஞ்சு பாக்ஸ் ஆபிஸ்

ரூ.265 கோடியை தொட்டது சஞ்சு பாக்ஸ் ஆபிஸ்
Published on

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ரன்பீர்கபூர் நடித்து வெளிவந்த படம் சஞ்சு. இது சஞ்சய்தத்தின் வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் இப்படம் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்தது. இந்தப் படம் சமீபத்தில் உலகம் முழுவதும் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சஞ்சு திரைப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 34 கோடி வசூல் செய்தது. எனவே இப்படம்தான் இந்த வருடம் வெளியான படங்களில் முதல்நாள் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்தது. இப்படம் முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ 65 கோடி வசூல் செய்தது. முதல் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சஞ்சு படம் சாதனை படைத்தது. அதேபோல், 5 நாட்களில் ரூ.150 கோடி வசூல் செய்து இருந்தது. ஒரு வாரத்தில் ரூ.200 கோடி வசூல் ஆனது.

படம் வெளியாகி நேற்றுடன் 10 நாட்கள் ஆன நிலையில், சஞ்சு படம் இதுவரை ரூ.265.48 கோடி வசூல் செய்துள்ளது. விடுமுறை நாளான நேற்று 28.04 கோடி ரூபாய் வசூல் ஆனது. சனிக்கிழமை ரூ.22.02 கோடி, வெள்ளிக்கிழமை 12.90 கோடியும் வசூல் ஆனது. விரைவில் இந்தப் படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com