அடுத்த ’இச்சாதாரி நாகம்’ இவர்தான்!

அடுத்த ’இச்சாதாரி நாகம்’ இவர்தான்!

அடுத்த ’இச்சாதாரி நாகம்’ இவர்தான்!
Published on

மெளனி ராய், அடா கான் இச்சாதாரி நாகங்களாக நடித்தத் தொலைக்காட்சித் தொடர், ’நாகின்’. சுதா சந்திரன், அர்ஜுன் பிஜ்லானி, ஆஷ்கா கோராடியா, கரண்விர் போரா உட்பட பலர் நடித்த இந்த தொடர் இந்தியில் மெகா ஹிட்டானது. ஏக்தா கபூர் தயாரித்த இத் தொடர், பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. 

முதல் தொடர் 2015-ம் ஆண்டிலும் இரண்டாவது தொடர் 2016-ல் வெளியானது. இது முடிவடைந்த நிலையில் இதன் அடுத்தப் பாகம் தயாராகிறது. 

முதல் இரண்டு பாகத்தில் நடித்த மெளனி ராய், அடா கான் ஆகியோர் இதில் நடிக்கவில்லை என்று தெரிகிறது. இவர்களுக்கு பதிலாக சஞ்சீதா ஷேக்கும் மற்றொரு நடிகையும் நடிக்க இருக்கின்றனர். சஞ்சிதா ஷேக் நடிப்பது உறுதி என தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சஞ்சிதா ஷேக், தமிழில் ராதா மோகன் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்தவர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com