\
மருமகளுக்காக ’7 ஜி ரெயின்போ காலனி’யை ரீமேக் செய்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி!

மருமகளுக்காக ’7 ஜி ரெயின்போ காலனி’யை ரீமேக் செய்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி!

மருமகளுக்காக ’7 ஜி ரெயின்போ காலனி’யை ரீமேக் செய்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி!
Published on

பிரபல இந்தி பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, தமிழில் ஹிட்டான ’7 ஜி ரெயின்போ காலனி’ படத்தை இந்தியில் தயாரிக் க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

செல்வராகவன் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ’7 ஜி ரெயின்போ காலனி’. 2004ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். நா.முத்துக்குமார் எழுதி இதில் இடம்பெற்ற பாடல்கள் பரபரப்பாகப் பேசப்பட்டன. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவான இந்தப் படம், பின்னர் சில மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

(ஷர்மின் சேஹல்)

இந்நிலையில் பிரபல இந்தி பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார். அவர் தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் அவரது சகோதரி மகள் ஷர்மின் சேஹலை ஹீரோயினாக நடிக்க வைக்க இருக்கி றார். ஷர்மின், சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்த மேரிகோம், தயாரித்து இயக்கிய ’பஜிராவோ மஸ்தானி’ படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இந்தப் படத்தை, மராத்தி இயக்குனர் மங்கேஷ் ஹடவாலே இயக்க இருக்கிறார். மீஸான் ஜாஃப்ரி ஹீரோவாக நடிக்கிறார். இவர், பிரபல நடிகர் ஜாவேத் ஜாஃப்ரியின் மகன்.

(மீஸான் ஜாஃப்ரி)
படத்துக்கான அதிகார அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com