\
சஞ்சய் தத் மீண்டும் ஷூட்டிங் வருவது எப்போது? - கே.ஜி.எஃப் 2 நிர்வாக தயாரிப்பாளர் தகவல்!

சஞ்சய் தத் மீண்டும் ஷூட்டிங் வருவது எப்போது? - கே.ஜி.எஃப் 2 நிர்வாக தயாரிப்பாளர் தகவல்!

சஞ்சய் தத் மீண்டும் ஷூட்டிங் வருவது எப்போது? - கே.ஜி.எஃப் 2 நிர்வாக தயாரிப்பாளர் தகவல்!
Published on

உடல்நலக் குறைவால் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் சஞ்சய் தத் தனது வேலையில் இருந்து சிறிது இடைவெளி எடுப்பதாக ரசிகர்களுக்குத் தெரிவித்திருந்தார். மேலும் அவரது உடல்நிலை குறித்து பலரும் யூகித்துவந்த நிலையில், ‘வதந்திகளை நம்பவேண்டாம்’ என்று சஞ்சய் தத்தின் மனைவி மானயட்டா தத் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்து வெளிவரவிருக்கும், கே.ஜி.எஃப் 2 இன் நிர்வாக தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேசியதில், மூன்று மாதங்களுக்குப் பிறகு சஞ்சய் தத் பணிக்குத் திரும்புவார் எனக் கூறியுள்ளார். சஞ்சய் தத் இப்போது சிகிச்சையில் இருப்பதாகவும், சிகிச்சை முடிந்த பின் படத்தை முடித்துத் தருவதாகவும், அவரது குழு கவுடாவிடம் பேசியதாகத் தெரிவித்தார். இன்னும் 3 நாட்கள் வேலையே உள்ளது எனவும், அவை நீட்டிப்பு காட்சிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத் ஆகஸ்ட் 8ஆம் தேதி உடல்நலக்குறைவால் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் ஆக்ஸ்ட் 10ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆனார். அடுத்த நாள், சமூக ஊடகங்களில், ஹாய் ஃப்ரெண்ட்ஸ், நான் மருத்துவ சிகிச்சைக்காக சிறிது இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். எனது குடும்பத்தினரும், நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். யாரும் கவலைப்படவோ, தேவையின்றி யூகிக்கவோ வேண்டாம். நான் விரைவில் வருவேன் என பதிவிட்டிருந்தார்.

ஆகஸ்ட் 12ஆம் தேதி அவருடைய மனைவி, சஞ்சு விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. எல்லாருக்கும் சோதனை காலங்கள் வரும். இதுவும் கடந்து போகும் என நம்புகிறேன். வந்ததிகளை யாரும் நம்பவேண்டாம் என்பதே என் மனமார்ந்த வேண்டுகோள். உங்களுடைய அன்பும், அரவணைப்பும், ஆதரவும் எங்களுக்கு வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

மகேஷ் பட்டின் இயக்கத்தில் சஞ்சய் நடிப்பில் ‘சதக் 2’ ஆக்ஸ்ட் 28ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளிவரவிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com