\
அஜித்தின் ‘ஏகே 61’ படத்தில் சஞ்சய் தத்?

அஜித்தின் ‘ஏகே 61’ படத்தில் சஞ்சய் தத்?

அஜித்தின் ‘ஏகே 61’ படத்தில் சஞ்சய் தத்?
Published on: 

அஜித்தின் ‘ஏ.கே.61’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் 3-வது முறையாக நடிக்கும் புதியப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ‘ஏ.கே.61.’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், அஜித் நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் ஐரோப்பிய சென்ற நடிகர் அஜித், தற்போது நாடு திரும்பியவுடன் திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான 47-வது துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று கலந்துகொண்டார்.

அப்போது, போட்டி நடைபெறும் ரைபிள் கிளப் முன்பு எதிர்பாரதவிதமாக ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், கட்டடத்தின் மேலே இருந்து ரசிகர்களை நோக்கி அஜித் கையசைத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், அஜித் இல்லாத காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படப்பிடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களும் வைரலாகின.

இந்நிலையில், ‘ஏ.கே.61’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் யஷ்ஷின் நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எஃப். 2’ படத்தில் அதிரா கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார். தற்போது ‘ஏ.கே. 61’ படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் சஞ்சய் தத்தை அணுகியதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com