\
சிகிச்சைக்கு மத்தியில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் சஞ்சய் தத்

சிகிச்சைக்கு மத்தியில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் சஞ்சய் தத்

சிகிச்சைக்கு மத்தியில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் சஞ்சய் தத்
Published on

மும்பையில் புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வரும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

அண்மையில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மும்பையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவரது மனைவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். அவருக்கு கீமோதெரபி முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட  கீமோதெரபி சிகிச்சை முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட சிகிச்சை அடுத்தவாரம் தொடங்க உள்ளது.

இந்நிலையில் அவர் ஷம்ஷேரா படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இரண்டு நாட்கள் நடக்கும் இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அவர் அதன் பின்னர்  மீண்டும் புற்றுநோய்க்கான சிகிச்சையை தொடர்வார் எனச் சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com