ஜீவாவின் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் டீஸர் வெளியீடு
ஜீவா நடிப்பில் உருவாகி வரும் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
நடிகவேல் எம் ஆர் ராதாவின் பேரன் ஐக் இயக்குனராக அறிமுகமாகும் இந்தப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். இயக்குனர் அட்லி தனது தயாரிப்பு நிறுவனமான ஆப்பில் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் டீஸர் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டீஸர் மாலை 6 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திகில் கலந்த காமெடி படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், சூரி, ராதாரவி, தம்பி ராமையா, கோவை சரளா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். படத்தின் டீஸர் வெளியீட்டு செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.