\
சங்கத்தலைவன், கால்ஸ், வேட்டை நாய்... ஒரே நாளில் மூன்று படங்கள் ரிலீஸ்

சங்கத்தலைவன், கால்ஸ், வேட்டை நாய்... ஒரே நாளில் மூன்று படங்கள் ரிலீஸ்

சங்கத்தலைவன், கால்ஸ், வேட்டை நாய்... ஒரே நாளில் மூன்று படங்கள் ரிலீஸ்
Published on

தமிழகத்தில் கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு, ஒரே நாளில் மூன்று திரைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன. 

'சங்கத் தலைவன்', 'Calls', 'வேட்டை நாய்' ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. 'மாஸ்டர்' படத்திற்கு பிறகு வெளியான படங்கள் வசூல் ரீதியில் பெரிதாக வெற்றியடையவில்லை எனச் சொல்லப்படுகிறது.

இருப்பினும் இந்த வாரம் மூன்று படங்கள் வெளியாகிள்ளன. அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் சமுத்திரகனி நடித்துள்ள 'சங்கத்தலைவன்', மறைந்த சின்னத் திரை நடிகை சித்ராவின் 'Calls', ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள 'வேட்டை நாய்' ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படங்கள் குறைந்தப் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாததால், இந்த வாரம் வெளியான படங்களுக்கு கணிசமான திரையரங்குகள் கிடைத்துள்ளன.

இருந்தாலும் ரசிகர்களின் வருகை எவ்வாறு இருக்கும் என்பதே பெரும் கேள்வியாக உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com