\
சங்கமித்ரா... ஹன்சிகாவுக்கு டெஸ்ட் போட்டோ  ஷூட்!

சங்கமித்ரா... ஹன்சிகாவுக்கு டெஸ்ட் போட்டோ ஷூட்!

சங்கமித்ரா... ஹன்சிகாவுக்கு டெஸ்ட் போட்டோ ஷூட்!
Published on

சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதைத் தொடர்ந்து அப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பல்வேறு நடிகைகளை அப்படக்குழுவினர் அணுகி வந்த நிலையில் தற்போது ஹன்சிகாவை வைத்து லுக் டெஸ்ட் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்கள். 

400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சுந்தர் .சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டள் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டு ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியான நிலையில் அப்படத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டார் ஸ்ருதிஹாசன். அப்போது முதல் அந்தப் படத்தில் நடிக்கப் போவதாக அரை டஜன் நாயகிகளின் பெயர்கள் அடிபட்டு வந்தது. ஆனால், இதுவரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக நாயகியின் பெயரை அறிவிக்கவில்லை. 

இதனால் படக்குழுவினருக்கு படத்தை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தப் பாத்திரத்தில் ஹன்சிகா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. தற்போது அவரை வைத்து சென்னையில் உள்ள  பின்னி மில்லில் லுக் டெஸ்ட் போட்டோ ஷூட்டை நடத்தியிருக்கிறது படக்குழு. ஆனாலும் இன்னும் படக்குழுவினர் இப்படத்தில் நடிக்க இருக்கும் நாயகியைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com