சங்கமித்ரா 8ஆம் நூற்றாண்டின் பேரழகி

சங்கமித்ரா 8ஆம் நூற்றாண்டின் பேரழகி

சங்கமித்ரா 8ஆம் நூற்றாண்டின் பேரழகி
Published on

ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் சங்கமித்ரா என்ற பிரம்மாண்ட படத்தை சுந்தர்.சி இயக்குகிறார்.

இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், ஜெயம்ரவி, ஆர்யா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் கதை என்ன என்பது குறித்து படக்குழு தெரிவித்துள்ளது. சங்கமித்ரா 8ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. சங்மித்ரா ஒரு பேரழகி. அவள் தன் ராஜ்ஜியத்தை காக்க போராடும் போது சந்திக்கும் இன்னல்களும், துயரங்களும் தான் படத்தின் கதை. பல்வேறு ராஜ்ஜியங்கள், உறவுகள் குறித்து இப்படம் பேசவுள்ளதாகவும். திரைப்பட மகுடத்தில் சங்கமித்ரா ஒரு ரத்தினமாக ஜொலிக்கும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது கற்பனை கதை என்றும். தொன்மையான தமிழ் மொழிக்கு இந்தப்படம் சமர்ப்பணம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கமித்ரா இரண்டு பாகங்களாக வெளியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com