சங்கமித்ரா ஷூட்டிங் ஆரம்பம்: குஷ்பு ட்விட்

சங்கமித்ரா ஷூட்டிங் ஆரம்பம்: குஷ்பு ட்விட்
சங்கமித்ரா ஷூட்டிங் ஆரம்பம்: குஷ்பு ட்விட்

மிக பிரம்மாண்ட படமாக தயாராக உள்ள சங்கமித்ரா படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளதாக நடிகை குஷ்பு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாக உள்ள படம் சங்கமித்ரா. இதன் ஷூட்டிங் ஜனவரி மாதம்தான் தொடங்க இருப்பதாக சுந்தர் சி தெரிவித்திருந்தார். அதற்கு முன் பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இப்படத்தின் ஃபஸ்ட் லுக் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டிருந்தது. படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் சங்கமித்ராவாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. அதற்காக அவர் வெளிநாட்டில் முறைப்படி வாள் பயிற்சி கற்று வந்தார். அதற்கான படங்களை ட்விட்டரிலிம் வெளியிட்டு இருந்தார். திடீரென அவர் படத்தில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு முறையாக கதை சொல்லப்படவில்லை என்று அவர் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. தற்போது இவர் இடத்தை யார் நிரப்ப போகிறார் என்பது தெரியவில்லை. ஆகவே படப்பிடிப்பும் தொடங்காமல் இருந்தது.

இந்நிலையில் கலகலப்பு 2 எடுப்பதற்கான படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகி சில நாட்களே ஆகியுள்ளன. அதற்குள் நடிகை குஷ்பு சங்கமித்ரா படம் தயாராகிவிட்டது என்றும் செட் வேலைகள் முழுவதும் முடிவடைந்து தற்சமயம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்றும் டுவிட் செய்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com