‘கடைசி விவசாயி’ படத்தில் இருந்து இளையராஜா விலகல்?

‘கடைசி விவசாயி’ படத்தில் இருந்து இளையராஜா விலகல்?

‘கடைசி விவசாயி’ படத்தில் இருந்து இளையராஜா விலகல்?
Published on

'கடைசி விவசாயி' திரைப்படத்தில் இருந்து இளையராஜா விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘காக்கா முட்டை’ திரைப்படம் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கி பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதற்கு பின்பு ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். தற்போது மணிகண்டன் இயக்கி வரும் திரைப்படம் ‘கடைசி விவசாயி’.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விவசாயம் தொடர்பான திரைப்படமாக ‘கடைசி விவசாயி’ திரைப்படம் இருக்குமென கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். படம் தொடர்பாக வெளியான போஸ்டர்களிலும் இளையராஜா பெயரே இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது இளையராஜா படத்தில் இருந்து விலகியுள்ளதாக தெரிகிறது. இளையராஜாவுக்கு பதில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com