சண்டக்கோழி2 இனி திண்டுக்கல்லில் ஷூட்டிங்

சண்டக்கோழி2 இனி திண்டுக்கல்லில் ஷூட்டிங்

சண்டக்கோழி2 இனி திண்டுக்கல்லில் ஷூட்டிங்
Published on

சண்டக்கோழி படத்தின் பாதிபடப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படக்குழுவினர் திண்டுக்கல் விரைகின்றனர்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண்  நடித்து சூப்பர் ஹிட்டான படம் சண்டக்கோழி.  2005-ல் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், இப்போது உருவாகி வருகிறது. இதில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். 

சென்னையில் இதற்காக பிரமாண்ட செட்  உருவாக்கப்பட்டது. திருவிழா காட்சிகள் அதில் எடுக்கப்பட்டன. சென்னையில் சண்டக்கோழி 2 படத்தின் பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மீதமுள்ள காட்சிகளை எடுக்க படக்குழுவினர் திண்டுக்கல் விரைகின்றனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள விஷால் படக்குழுவுனருடன் இருக்கும் புகைப்படத்தையும் அதில் பதிவிட்டுள்ளார். இது விஷாலின் 25வது படம். இதனை விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com