’சண்டக்கோழி 2’ திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் !

’சண்டக்கோழி 2’ திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் !

’சண்டக்கோழி 2’ திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் !
Published on

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'சண்டக்கோழி 2' படம் நாளை வெளியாகும் நிலையில்  “திரைப்படத்தை நாளை வெளியிடமாட்டோம்” என விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005-ம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘சண்டக்கோழி’. இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது. விஷாலின் 25 ஆவது படமான ‘சண்டக்கோழி2’. கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, ரோபோ சங்கர் எனப் பலர் நடித்துள்ளனர்.

இதனை விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி தயாரித்துள்ளது. இதனை லைகா நிறுவனம் வெளியிடுகிறது. மேலும் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தை யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.  இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இந்தப் படத்தினை அக்டோபர் 18 அன்று திரையிட இருப்பதாக விஷால் தன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இதனைதொடர்ந்து 'சண்டக்கோழி 2' படம் நாளை வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் மீது விசாரணை இன்றி நடவடிக்கை எடுத்த விஷாலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்  ‘சண்டைக்கோழி-2’ திரைப்படத்தை நாளை வெளியிடமாட்டோம் என விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் ’சண்டக்கோழி 2’ படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com