\
“திருமணம் செய்வதாக ஏமாற்றினார்” - தர்ஷன் மீது வழக்குப்பதிவு

“திருமணம் செய்வதாக ஏமாற்றினார்” - தர்ஷன் மீது வழக்குப்பதிவு

“திருமணம் செய்வதாக ஏமாற்றினார்” - தர்ஷன் மீது வழக்குப்பதிவு
Published on

பிக்பாஸ் சீஸன் 3 புகழ் தர்ஷனுக்கும், நடிகை சனம் ஷெட்டிக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். இருவரும் மாறிமாறி குறைசொல்லி வந்த நிலையில், ஏற்கெனவே தர்ஷன் பற்றி சமூக ஊடகங்களில் பேசிவந்தார் சனம் ஷெட்டி.

இதனிடையே காதலித்து தன்னை ஏமாற்றியதாக தர்ஷன்மீது சனம் ஷெட்டி கொடுத்த புகாரின்பேரில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாறு மகளிர் காவல்துறையினர் இந்த வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2 ஆண்டுகளாக காதலித்து, திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், தர்ஷன் திருமணம் செய்ய மறுப்பதாக ஷனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் தர்ஷன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மோசடி, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com