சனம் ஷெட்டி
சனம் ஷெட்டிpt web

“நடிகைகள் மட்டுமல்ல.. நடிகர்களுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள்” சனம் ஷெட்டி குற்றச்சாட்டு

தமிழ் திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல்களும் அட்ஜெஸ்மெண்ட்களும் செய்ய மிரட்டல்கள்உள்ளதாக நடிகை சனம் ஷெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
Published on

கொல்கத்தா மற்றும் கிருஷ்ணகிரி சம்பவங்களை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த 'நவீன நங்கையர் பவுண்டேஷன்' சார்பில் நடிகை சனம் செட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நடிகைகள் மட்டுமல்ல நடிகர்களும் இதுபோன்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்” என ஒரு பரபரப்பை குற்றச்சாட்டை முன் வைத்தார்.

அவர் கூறியதாவது, “பாலியல் சீண்டல்கள் தமிழ் திரையுலகில் நடப்பதில்லையா என்றால், கண்டிப்பாக நடக்கிறது. இல்லையென்று யாராலும் சொல்ல முடியாது. என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களைக் கூட கூறியுள்ளேன். நடிகைகள் மட்டுமல்ல, நடிகர்களும் இதை எதிர்கொள்கிறார்கள்” என தெரிவித்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com