\
உதயநிதிக்கு வில்லனாகிறார் சமுத்திரக்கனி

உதயநிதிக்கு வில்லனாகிறார் சமுத்திரக்கனி

உதயநிதிக்கு வில்லனாகிறார் சமுத்திரக்கனி
Published on

பிரியதர்ஷன் இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு வில்லனாக நடிக்க சமுத்திரக்கனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மோகன் லால் நடிப்பில் கடந்த 2016ல் வெளியான ஒப்பம் படத்தில் சமுத்திரக்கனியுடன் இயக்குனர் பிரியதர்ஷன் பணியாற்றினர். அந்த படத்தில் வில்லனாக நடித்த சமுத்திரக்கனியின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட பிரியதர்ஷன், உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் புதிய படத்துக்கும் அவரையே வில்லனாக ஒப்பந்தம் செய்ய விரும்பினார். பஹத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ’மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் நமீதா பிரமோத் ஹீரோயின் ரோலுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com