கமல் கருத்தும் ரஜினி முடிவும் சரிதான்: சமுத்திரக்கனி
ரஜினி அரசியலுக்கு வருவது அவர் விருப்பம். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். மக்கள்தான் யார் வேண்டும், யார் வேண்டாம் என தீர்மானிப்பார்கள் என திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி கூறினார்.
இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி நடித்த ’தொண்டன்’ படம் தமிழகம் முழுவதும் வெளியாகி ஒடிக் கொண்டு இருக்கிறது. கரூரில் தொண்டன் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் இயக்குநர் சமுத்திரகனி நேற்று ரசிகர்களை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது குறித்து கமல் தெரிவித்த கருத்து சரிதான். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது சொந்த விருப்பம். மக்கள் தான் யார் வேண்டும் வேண்டாம் என்று முடிவு செய்வார்கள். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்து இருப்பது வலியான, வேதனையான விசயம். தமிழருக்காக ஐநா சபை வரை குரல் கொடுத்த, எந்த தப்பும் செய்யாதவரை குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கிறார்கள். அதனையும் நாம் வேடிக்கை தான் பார்த்துகொண்டு இருக்கிறோம். இது தமிழர்களை பாதுக்காக்க நினைக்கிற ஒவ்வெருவரையும் அச்சுறுத்தும் செயல்’ என்றார்.

