மறைந்த விசுவின் சிஷ்யர் இயக்கும் ’சம்சாரம் அது மின்சாரம் 2: வெளியானது அறிவிப்பு!

மறைந்த விசுவின் சிஷ்யர் இயக்கும் ’சம்சாரம் அது மின்சாரம் 2: வெளியானது அறிவிப்பு!
மறைந்த விசுவின் சிஷ்யர் இயக்கும் ’சம்சாரம் அது மின்சாரம் 2: வெளியானது அறிவிப்பு!

கடந்த 1986 ஆம் ஆண்டு மறைந்த நடிகர் விசுவின் இயக்கத்தில் வெளியான ’சம்சாரம் அது மின்சாரம்’ படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூல் சாதனை செய்ததோடு தேசிய விருதும் பெற்றப் படம். இப்போதும், டிவியில் ஓடினால், இப்படத்திற்கே மக்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அப்படியொரு குடும்பக்கதை. இப்படத்தை ஏ.வி.எம் சரவணன் தயாரித்திருந்தார்.

இதன், இரண்டாம் பாகத்தை விசு இறப்பதற்குமுன் ’கதை, திரைக்கதை, வசனம் எழுதி வைத்துவிட்டேன்.ஆனால் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை’ என்று வேதனையோடு தெரிவித்திருந்தார். இந்நிலையில், விசு உடல்நலக்குறைவால் கடந்த மார்ச் மாதம் இறந்துவிடவே, அவரது சிஷ்யர் பாஸ்கர்ராஜ் ’சம்சாரம் அது மின்சாரம் 2’ படத்தை இயக்கவிருக்கிறார்.

இவர், ராஜ் டிவியில் ஒளிபரப்பான அகட விகடம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இப்படத்தின் உதவி வசனகர்த்தாவாக விசுவின் மகள் லாவண்யா பணியாற்றுகிறார். பரத்வாஜ் இசையமைக்க பாடல்களை பா.விஜய் எழுதுகிறார். சம்சாரம் அது மின்சாரம் படம் போலவே இதுவும் குடும்பப்படம் என்று சொல்லப்படுகிறது. மக்கள் அரசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது! 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com