
’மெர்சல்’ படத்தில் விஜய்யுடன் மீண்டும் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
விஜய்யுடன் கத்தி, தெறி படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள சமந்தா, இப்போது மெர்சல் படத்திலும் நடித்துள்ளார். அட்லி இயக்கும் இந்தப் படத்தில் நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகரவால், சத்யராஜ், வடிவேலு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் நாளை வெளியிடப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் சமந்தா சம்மந்தப்பட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது.
இதுபற்றி சமந்தா கூறும்போது, ‘விஜய்யுடன் மூன்றாவது படத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் மீண்டும் நடித்ததில் மகிழ்ச்சியாக உணர்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
படத்தை செப்டம்பர் இறுதிக்குள் சென்சாருக்கு அனுப்ப வேண்டும் என தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருப்பதால் அட்லீ போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பரபரப்பாக இறங்கியுள்ளார்.