\
வெப் சீரிஸில் பெண் தீவிரவாதி ஆகிறார் சமந்தா!

வெப் சீரிஸில் பெண் தீவிரவாதி ஆகிறார் சமந்தா!

வெப் சீரிஸில் பெண் தீவிரவாதி ஆகிறார் சமந்தா!
Published on

வெப் சீரிஸில் பெண் தீவிரவாதியாக நடிகை சமந்தா நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

லிங்குசாமி இயக்கிய ’அஞ்சான்’ படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய். இவர் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான ’த ஃபேமிலி மேன்’ என்ற வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாக இருக்கிறது. இதிலும் மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடிக்கிறார். இதில் நடிகை சமந்தா, வில்லி கேரக்டரில் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. தீவிரவாதியாக நடிக்க இருப்பதாக, இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹீரோயினாக நடித்து வரும் சமந்தா, முதன் முறையாக இதுபோன்ற கேரக்டரில் நடிக்கிறார். ’த ஃபேமிலி மேன்’ படத் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் சமந்தாவை சந்தித்து கதையை கூறியுள்ளனர். அவருக்குப் பிடித்திருந்தால், ஓகே சொல்லி விட்டார். மனோஜ் பாஜ்பாயுடன் பிரியாமணி, சந்தீப் கிஷன் ஆகியோரும் நடிக்க உள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com