இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் திருமணப்பத்திரிகை!

இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் திருமணப்பத்திரிகை!

இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் திருமணப்பத்திரிகை!
Published on

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

இந்நிலையில் அவர்களது திருமணப்பத்திரிக்கை வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி அடுத்த மாதம் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில்  அவர்களது திருமணம் கோவா பீச் ஹோட்டலில் இந்து முறைப்படியும், கிருத்தவ முறைப்படியும் நடைபெற இருக்கிறது. இந்தத் திருமணத்திற்கு திரையுலக நட்சத்திரங்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில், பழைய புடவை அணிந்து திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் சமந்தா. அந்தப்புடவை நாகசைதன்யாவின் பாட்டியின் பாரம்பரிய திருமணப் புடவை. எனவே குடும்ப வழக்கப்படி அந்த புடவையை அணிந்து கொண்டு திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் சமந்தா. இதற்காக அந்தப் புடைவையை பல லட்ச ரூபாய் செலவில் பாலீஷ் செய்துவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com