திருமண முறிவு: ட்விட்டரில் பெயரை மாற்றிய ஐஸ்வர்யா; நாக சைதன்யாவை அன்ஃபாலோ செய்த  சமந்தா

திருமண முறிவு: ட்விட்டரில் பெயரை மாற்றிய ஐஸ்வர்யா; நாக சைதன்யாவை அன்ஃபாலோ செய்த சமந்தா

திருமண முறிவு: ட்விட்டரில் பெயரை மாற்றிய ஐஸ்வர்யா; நாக சைதன்யாவை அன்ஃபாலோ செய்த சமந்தா
Published on

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது பெயருடன் இருந்த கணவரது பெயரை மாற்றிய நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நாக சைதன்யாவை அன்ஃபாலோ செய்துள்ளார்.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர், தனுஷை வைத்து ‘3’ என்ற படத்தையும், கவுதம் கார்த்திக்கை வைத்து ‘வை ராஜா வை’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் மியூசிக் ஆல்பம் ஒன்றை இயக்கினார்.

கடந்த வாரம் வெளியான இந்த மியூசிக் ஆல்பத்திற்கு நடிகர்கள் மோகன்லால், பிருத்விராஜ், மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன் உள்பட தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தநிலையில், நடிகர் தனுஷும் தனது ட்விட்டர் பக்கத்தில், தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள் என்று வாழ்த்து தெரிவித்தார்.

இதனிடையே திருமண முறிவுக்குப் பின் சமூகவலைத்தளப் பக்கங்களில், தனது பெயருக்குப் பின்னால் இருந்த தனுஷின் பெயரை மாற்றாமல் அப்படியே வைத்திருந்தநிலையில், தற்போது ‘ஐஸ்வர்யா ரஜினிகாந்த்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மட்டும் மாற்றிக்கொண்டுவிட்டார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயரை மாற்றாமல் அதே ஐடியை வைத்துள்ளார்.

இதேபோல், இந்திய திரையுலகையே ஆச்சரியப்படுத்திய நட்சத்திர ஜோடியான சமந்தா - நாக சைதன்யா தம்பதி, 4 வருட திருமண பந்தத்தை கடந்த வருடம் முறித்துக்கொள்வதாக அறிவித்தனர். இவர்கள் பிரிந்ததற்கு என்ன காரணம் என்று தெரியாதநிலையில், நடிகை சமந்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உருக்கமான பதிவை இட்டு நாகசைதன்யாவை அன்ஃபாலோ செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பதிலுக்கு நாக சைதன்யாவும் அவரை அன்ஃபாலோ செய்துள்ளார். திருமண முறிவு ஏற்பட்டாலும், நட்பு தொடரும் என்று அறிவித்த நிலையில் இந்த தம்பதியின் இந்த நடவடிக்கைகள், அவர்களது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com