சமந்தாவின் ‘சாகுந்தலம்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சமந்தாவின் ‘சாகுந்தலம்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சமந்தாவின் ‘சாகுந்தலம்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தாவின் ‘சாகுந்தலம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளியான ‘ருத்ரமாதேவி’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் குணசேகர் இயக்கியுள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்’. காளிதாசன் எழுதிய புராணக் கதையான சகுந்தலையின் காதல் கதையை மையமாகக் கொண்டு ‘சாகுந்தலம்’ படம் உருவாகியுள்ளது. சகுந்தலை வேடத்தில் சமந்தாவும், மன்னன் துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடைப்பட்ட காதல் கதையைத் தான் படக்குழுவினர் பீரியட் படமாக எடுத்துள்ளனர்.

அண்மையில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், வனம் ஒன்றில் மான்கள் மற்றும் பறவைகள் சூழ வெள்ளை உடையில் சமந்தா அமர்ந்திருந்தது ரசிகர்களை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து மோஷன் போஸ்டருடன், கடந்த நவம்பர் 4-ம் தேதி இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி சிஜி பணிகள் நிறைவடையாத நிலையிலும், சமந்தாவின் மற்றொருப் படமான ‘யசோதா’ கடந்த நவம்பர் 11-ம் தேதி வெளியானதாலும், இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற பிப்ரவரி மாதம் 17-ம் தேதி இந்தப் படம் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3டி தொழில்நுட்பத்தில் இந்தப் படம் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com