ஆடை குறித்து ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா

ஆடை குறித்து ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா

ஆடை குறித்து ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா
Published on

''பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு உங்களை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்'' எனப் பதிலடி கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.

நடிகை சமந்தா சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பச்சை நிற கவுன் அணிந்து கலந்து கொண்டார். அவ்விழாவில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான பாசிட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் ஒரு சில நெகட்டிவ் கமெண்ட்ஸ்களும் பதிவாகியுள்ளது

இந்த நிலையில் தனது புகைப்படங்களுக்கு வந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு நடிகை சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். அதில், ''பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை மட்டமாக எடை போடுவதை முதலில் அனைவரும் நிறுத்த வேண்டும். பெண்களின் ஆடையை வைத்து அவர்களை தீர்மானிப்பது, அவர்களின் இனம், படிப்பு, சமூக அந்தஸ்த்து, நிறம் என ஒரு பெரிய பட்டியலே  நீண்டு கொண்டிருக்கிறது.

நாம் 2022ல் இருக்கிறோம். இன்னமும், பெண்களை அவர்கள் அணியும் உடையை வைத்து இப்படி ஜட்ஜ் பண்ணுவதை உடனடியாக நிறுத்துங்கள். பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு நம்மை மேம்படுத்துவது கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்'' எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: பாலியல் குற்றங்களை தடுக்க இதுதான் சரியான வழி - நடிகை ரோகிணி சொன்ன அறிவுரை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com